எழுதியவர்: டாக்டர் பட்டி ஹேபே, என்.எம்.டி.
வெளியிடப்பட்ட தேதி: செப்டம்பர் 20, 2022 | கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட தேதி: அக்டோபர் 12, 2026
ஓவுலேஷன் டெஸ்ட் மற்றும் ஓவுலேஷன் டெஸ்ட் ஸ்ட்ரிப்பில் ஏற்படும் மாற்றங்கள், உங்கள் மாதவிடாய் சுழற்சியின் முறைகளைப் புரிந்துகொள்ளவும், உங்கள் ஃபெர்டைல் விண்டோவைக் கண்டறியவும் உதவும் சக்திவாய்ந்த கருவிகளாகும். உங்கள் சுழற்சியின்போது என்னென்ன நிகழ்கின்றன, ஓவுலேஷன் டெஸ்ட்கள் எப்படிச் செயல்படுகின்றன, உங்கள் டெஸ்ட் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதைத் தெரிந்துகொள்வது, கர்ப்பம் தரிக்கும் பயணத்தில் உங்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கலாம்!
லூட்டினைசிங் ஹார்மோன் மற்றும் ஓவுலேஷன் நாள்
மாதவிடாய் சுழற்சியில் முக்கியமாக நிகழும் ஒரு நிகழ்வு ஓவுலேஷன் ஆகும். இந்தச் செயல்முறையின்போது, முதிர்ச்சியடைந்த கருமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறுகிறது. ஒவ்வொரு சுழற்சியிலும் ஓவுலேஷன் ஏற்படத் தூண்டும் ஹார்மோன் லூட்டினைசிங் ஹார்மோன் (எல்.எச்.) ஆகும்.
உங்கள் உடலில் எல்.எச். அளவு ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது, அதையே உங்கள் எல்.எச். பீக் என்று அழைக்கிறோம். அதன் பிறகு அடுத்த 24–36 மணி நேரத்திற்குள் ஓவுலேஷன் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். கருமுட்டை வெளியேறிய பிறகு, அது 24 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும். ஆனால், விந்தணுக்கள் பெண்ணின் உடலில் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கலாம்.
ஓவுலேஷன் ஏற்படும் நேரம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் 14-வது நாளில் (சி.டி. 14) ஓவுலேஷன் ஏற்படும் என்று நம்புகிறார்கள். ஆனால், உண்மையில், தி பி.எம்.ஜே. இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, “சுமார் 30% பெண்களுக்கு மட்டுமே, மருத்துவ வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மாதவிடாய் சுழற்சியின் 10-வது நாள் முதல் 17-வது நாள் வரையிலான நாட்களுக்குள் ஃபெர்டைல் விண்டோ முழுமையாக அமைகிறது.”
இதனால், கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும்போது உடலுறவு கொள்ளும் நேரத்தைத் தவறாகத் திட்டமிடும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது. ஓவுலேஷன் பிரெடிக்டர் கிட்கள் (ஓ.பி.கே.க்கள்) பயன்படுத்துவது, உங்கள் தனிப்பட்ட ஹார்மோன் மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், ஓவுலேஷனைக் கண்காணித்து விரைவாகக் கர்ப்பம் தரிக்கவும் உதவும்.
குறைவான, அதிகமான எல்.எச். அளவுகள் மற்றும் எல்.எச். பீக்: இவை அனைத்தும் எதைக் குறிக்கின்றன?
உங்கள் எல்.எச். அளவுகளில் காணப்படும் குறைவான, அதிகமான மற்றும் பீக் முடிவுகள், உங்கள் சிறுநீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் ஓவுலேஷன் டெஸ்ட் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

பெரும்பாலான ஆரோக்கியமான பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்தில் எல்.எச். அளவு குறைவாக இருக்கும். பின்னர், ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சற்று முன்பு அதன் மிக உயர்ந்த அளவை (எல்.எச். பீக்) அடையும் வரை படிப்படியாக அதிகரிக்கும்.
பிரீமம் ஆப்பில், எல்லாவற்றையும் தானியங்கி முறையிலும் எளிமையாகவும் மாற்றியுள்ளோம்! ஓவுலேஷன் டெஸ்ட் எடுத்த பிறகு, ஆப்பில் உள்ள கேமராவைப் பயன்படுத்தி உங்கள் ஓவுலேஷன் டெஸ்ட்டின் புகைப்படத்தை எடுத்தால் போதும். ஆப் தானாகவே உங்கள் எல்.எச். முடிவுகளைக் கணக்கிடும். உங்கள் ஹார்மோன் மாற்றங்களைப் பிரீமம் ஆப்பின் ‘சார்ட் வியூ’ மூலம் பார்த்து, உங்கள் ஃபெர்டைல் விண்டோவை எளிதாகக் கண்டறியலாம்!
ஒவ்வொரு சுழற்சியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பாசிட்டிவ் ஓவுலேஷன் டெஸ்ட்கள் வருமா?
எல்.எச். அளவு பல நாட்களுக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஓவுலேஷனை வெற்றிகரமாகத் தூண்டுவது கடைசியாக ஏற்படும் மிக உயர்ந்த எல்.எச். அளவுதான்.
பல பாசிட்டிவ் முடிவுகளைப் பெறும் பெண்களுக்கு, எல்.எச். சர்ஜ் படிப்படியாகத் தொடங்கும். இந்த வகையான சர்ஜின்போது, உங்கள் இறுதியான எல்.எச். பீக் நாளை அடைவதற்கு முன்பு, அதாவது எல்.எச். அளவு கடைசியாக மிக உயர்ந்த நிலையை அடைவதற்கு முன்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்களுக்கு பாசிட்டிவ் ஓவுலேஷன் டெஸ்ட் முடிவுகளைப் பார்க்கலாம்.
வேறு சில பெண்களுக்கு, எல்.எச். சர்ஜ் வேகமாகத் தொடங்கி, சில மணி நேரங்களிலேயே பீக் நிலையை அடையும். இதனால், பல நாட்களாக டெஸ்ட் எடுத்தாலும் ஒரே ஒரு பாசிட்டிவ் ஓவுலேஷன் டெஸ்ட் மட்டுமே கிடைக்கலாம்.
நீங்கள் புதிதாக டெஸ்ட் எடுக்கத் தொடங்கியிருந்தாலோ அல்லது தொடர்ந்து டெஸ்ட் எடுத்தும் உங்கள் எல்.எச். பீக்கைக் கண்டறிய முடியாமலிருந்தாலோ, ஒரு நாளைக்கு இரண்டு முறை டெஸ்ட் எடுப்பது உங்களுக்கு உதவலாம். ஏனெனில், உங்கள் எல்.எச். சர்ஜ் வேகமாக ஏற்பட்டு, நீங்கள் உங்கள் பீக்கைத் தவறவிட்டிருக்கலாம்!
ஹார்மோன் சர்ஜ் ஏற்படும் 3 பொதுவான வகைகள்
வகை 1: ஒற்றை பீக்
சில பெண்களுக்கு, எல்.எச். அளவு சீராக அதிகரித்து பீக் நிலையை அடையும். ஓவுலேஷன் டெஸ்ட்களில், டெஸ்ட் லைன் படிப்படியாகக் கருமையாகி, பீக் நிலையை அடைந்த பிறகு மீண்டும் வெளிர்ந்து, ஆரம்ப நிலைக்குத் திரும்புவதைக் காணலாம்.
வகை 2: பிளாட்டோ (ஒரே அளவில் நீடித்தல்)
படிப்படியாகத் தொடங்கும் எல்.எச். சர்ஜின் இரண்டாவது வகை, “பிளாட்டோ” எனப்படும். இந்த வகையில், ஓவுலேஷனுக்கு முன்பு பல நாட்களுக்கு ஒரே மாதிரியான அடர்த்தியுடன் தொடர்ந்து பாசிட்டிவ் முடிவுகள் கிடைக்கும். எந்த ஒரு லைனும் மற்ற லைன்களைவிடத் தெளிவாகக் கருமையாகத் தெரியாது.
இந்த நிலையில், டெஸ்ட் லைன் மீண்டும் வெளிரத் தொடங்கும் வரை தொடர்ந்து கண்காணிக்கப் பரிந்துரைக்கிறோம். அந்த நாள் உங்களின் மிகவும் ஃபெர்டைலான நாள் ஆகும். அந்தச் சுழற்சியில் கிடைக்கும் கடைசி பாசிட்டிவ் முடிவுதான் உங்கள் பீக் நாள் ஆகும்.
வகை 3: பல பீக்குகள்

இன்னும் சில பெண்களுக்கு, எல்.எச். அளவு படிப்படியாக அதிகரிக்கும்போது இடையிடையே சில சரிவுகள் ஏற்படும். இதுவே பல பீக்குகள் எனப்படும். இந்த நிலையில், சில நாட்கள் இடைவெளியில் டெஸ்ட் லைனின் அடர்த்தி அதிகரித்தும் குறைந்தும் இருப்பதைக் காணலாம். இது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்!

எது உண்மையான பீக்?
கடைசியாக ஏற்படும் மிக உயர்ந்த எல்.எச். அளவுதான் உண்மையான பீக் நாளாகும். இது ஓவுலேஷன் விரைவில் ஏற்படப் போகிறது என்பதைக் குறிக்கிறது. மன அழுத்தம், நோய் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் காலங்களில் பல பீக்குகள் தோன்றலாம். ஆனால், இவை மட்டுமே அதற்கான காரணங்கள் அல்ல. உங்கள் எல்.எச். பீக்கைக் கண்டறிந்துவிட்டதாக நீங்கள் நினைத்தாலும், உங்கள் எல்.எச். அளவு மீண்டும் ஆரம்ப நிலைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்த தினமும் தொடர்ந்து டெஸ்ட் எடுங்கள்.
ஒரே சுழற்சியில், சில நாட்கள் இடைவெளியில் இரண்டு பீக் முடிவுகளையோ அல்லது இரண்டாவது எல்.எச். சர்ஜையோ நீங்கள் பெற்றிருந்தால், பல ஃபாலிக்கிள் தூண்டுதல் ஏற்பட்டிருக்கலாம். இதன் அர்த்தம் என்ன?
கர்ப்பம் தரிக்க, ஒரு ஃபாலிக்கிள் (கருமுட்டையைச் சுற்றியுள்ள பை போன்ற அமைப்பு) உங்கள் சினைப்பையிலிருந்து வெளியேற வேண்டும். கருமுட்டையை வெளியிட, அந்த ஃபாலிக்கிள் வெடித்துத் திறக்க வேண்டும். பல ஃபாலிக்கிள் தூண்டுதல் ஏற்படும் நிலையில், உங்கள் உடல் ஃபாலிக்கிளை வெளியிடுகிறது, ஆனால் அது வெடித்துத் திறப்பதில்லை. அதனால், கருமுட்டை வெளியேறாது; எனவே உங்களால் கர்ப்பம் தரிக்க முடியாது. உங்கள் உடல் இதை உணர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு இரண்டாவது ஃபாலிக்கிளை வெளியிடுகிறது.
உங்களுக்கு எந்த வகையான ஹார்மோன் பேட்டர்ன் இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியும் கூட மாறுபடலாம்! விரைவாகக் கர்ப்பம் தரிப்பதற்கான சிறந்த வழி, சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு, உங்கள் சுழற்சியை முறையாகக் கண்காணிப்பதன் மூலம் உங்கள் தனிப்பட்ட பேட்டர்ன்களைப் புரிந்துகொள்வதாகும்.
பிரீமம் ஆப்பின் தானியங்கி ஓவுலேஷன் டெஸ்ட் ரீடர், உங்கள் ஓவுலேஷன் டெஸ்ட் முடிவுகளைப் படிக்கவும், உங்களுக்கே உரிய பேட்டர்ன்களைக் கண்டறியவும் உதவுகிறது. ஓவுலேஷன் டெஸ்ட் எடுப்பதையும் உங்கள் பீக்கைக் கண்டறிவதையும் பழகிக்கொள்ள இரண்டு மாதவிடாய் சுழற்சிகள் வரை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, முதல் சுழற்சியிலேயே உங்கள் பீக்கைக் கண்டறிய முடியவில்லை என்றால் மனம் தளர வேண்டாம்!
சில சுழற்சிகளாகத் தொடர்ந்து கண்காணித்தும் உங்கள் எல்.எச். பேட்டர்ன்களைப் புரிந்துகொள்வதிலோ அல்லது எல்.எச். பீக்கைக் கண்டறிவதிலோ சிரமம் இருந்தால், உங்கள் பிரீமம் ஆப் மூலம் எங்களின் ஃபெர்டிலிட்டி நிபுணர்களில் ஒருவருடன் ஆன்லைன் ஆலோசனைக்கான நேரத்தைத் திட்டமிடுங்கள்.
மேற்கோள்கள்
https://pubmed.ncbi.nlm.nih.gov/17434509 – ஓவுலேஷன் ஏற்படும் இளம் பெண்களின் சிறுநீரில் காணப்படும் லூட்டினைசிங் ஹார்மோன் சர்ஜின் பண்புகள்
ஆசிரியர் பற்றி
(படம்)
ஆசிரியரைப் பின்தொடரவும்:
டாக்டர் பட்டி ஹேபே, என்.எம்.டி.
மூத்த மருத்துவ ஆலோசகர்
டாக்டர் பட்டி ஹேபே, பிரீமம் ஃபெர்டிலிட்டியில் மூத்த மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றுகிறார். கருத்தரிப்பதற்கு முந்தைய பராமரிப்பு, ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைந்த ஃபெர்டிலிட்டி சிகிச்சை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
டாக்டர் ஹேபே, சோனோரன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பிரிவில் இயற்கை மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும், கொலராடோவின் போல்டர் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த உடலியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.





